முன்னோட்ட வெளியீட்டிற்கு வராத நாயகன்

முன்னோட்ட வெளியீட்டிற்கு வராத நாயகன்

1 mins read
2565fbff-ddd9-42b3-ab87-ccb29c8a2c95
-

முதல்முறையாக விக்ரம் பிரபு இரட்டை வேடத்தில் நடிக்க, அவருக்கு ஜோடியாக நிக்கி கல்ராணி, பிந்து மாதவி நடிக்கும் படம்தான் 'பக்கா'. இப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது. அந்நிகழ்ச்சியில் படத்தின் நாயகன் விக்ரம் பிரபு கலந்து கொள்ளாதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. விக்ரம் பிரபு போக்குவரத்து நெரிசரில் மாட்டிக்கொண்டதாக வும் விரைவில் வந்து விடுவார் என்றும் முதலில் அங்கிருந்தவர் கள் பேசிக்கொண்டார்கள்.

ஆனால் நிகழ்ச்சியில் நடிகை நிக்கி கல்ராணி பேசும்போது, "விக்ரம் பிரபுவின் வேறொரு படப் பிடிப்பு முடிய நேரமாகிவிட்டதால் வர முடியவில்லை என்றும் அதற் காக வருத்தம் தெரிவித்துக் கொள்வதாகவும் விக்ரம் பிரபு தகவல் அனுப்பியதாக படித்துக் காண்பித்தது மேலும் பல கேள்விகளை எழுப்பியது. முன்னதாக விக்ரம் பிரபுவிடம் ஒப்புதல் பெறப்பட்டே 'பக்கா' விழாவிற்கு ஏற்பாடு செய்யப் பட்டது. எனவே அவர் நிகழ்ச் சியில் கலந்துகொள்ளாதது சர்ச் சையைக் கிளப்பியுள்ளது. இப்படத்தில் தயாரிப்பாளர் சிவக்குமார் முக்கிய கதா பாத்திரம் ஒன்றில் நடித்துள்ளதாக வும் படப்படிப்பில் விக்ரம் பிரபு வோடு கருத்து வேறுபாடு ஏற்பட்ட தாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாகவே 'பக்கா' பட விழாவிற்கு விக்ரம் பிரபு வரவில்லை என்று கூறப்படுகிறது.

பக்கா படத்தின் ஒரு காட்சியில் பிந்து மாதவி, விக்ரம் பிரபு.