'நாயகர்களுக்கு அதிக சம்பளம் கொடுப்பது சரி'

'நாயகர்களுக்கு அதிக சம்பளம் கொடுப்பது சரி'

1 mins read
67d0826a-1180-4f6e-94f6-6f03be33cf99
-

நாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களி லேயே அதிகம் நடித்து வரும் அனுஷ்கா, படத்தின் கதாநாயகர்களுக்கு அதிக சம்பளம் கொடுப்பது சரிதான் என்று கூறியுள்ளார். பொதுவாக கதாநாயகிகளின் சம்பளம் ஒரு மடங்கு ஏறினால் கதாநாயகர்களின் சம்பளம் ஐந்து மடங்காக ஏறுவது வழக்கமான ஒன்றுதான். இந்தச் சம்பள வித்தியாசம் குறித்து சில நாயகிகள் அதிருப்தி அடைவதும் உண்டு. ஆனால் கதாநாயகனுக்கு சமமாக மொத்தப் படத்தையும் தாங்கிப் பிடிக்கும் நடிகை அனுஷ்கா, இந்த விஷயத்தில் கதாநாயகர்களின் பக்கம் தான் நிற்கிறார்.

இவர் நடிப்பில் நேற்று முன்தினம் வெளியான 'பாக்மதி' படத்தை °விளம்பரப்படுத்துவதற்காக அண்மையில் கேரளாவுக்குச் சென்றிருந்த அனுஷ்கா விடம் இந்தச் சம்பள முரண்பாடு குறித்துக் கேட்கப்பட்டது. அப்போது தனது கருத்தை வெளிப்படுத்திய அவர், "படத்தின் கதாநாயகனுக்கு அதிக சம்பளம் கொடுப்பது என்பது சரியே. ஒரு படத்தில் கடுமை யான உழைப்பை அவர்கள் கொட்டி நடிக்கிறார்கள். "ஆனால் ஒரு படம் வெற்றியடையாமல் போகும் போதும் அதற்கான கெட்டபெயரையும் அவர்கள் தானே ஏற்றுக்கொள்கிறார்கள். இதனால் நடிகை களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லையே," எனக் கூறி உள்ளார்.