'கண்ணா லட்டு தின்ன ஆசையா' படத்தில் நடித்த விசாகா சிங்கை, தமிழ் ரசிகர்கள் சிலர் மறந்திருக்கலாம். தமிழில் தொடர்ந்து நடிக்காவிட்டாலும், இந்தி வரை சென்றுவிட்டார் அம்மணி. அங்கு சில படங்களில் நடித்து பாலிவுட் ரசிகர்களிடம் ஓரளவு பெயரும் வாங்கி விட்டாராம். விசாகாவும் பிரியா ஆனந்தும் இணைபிரியா தோழிகள். இருவரும் தினமும் ஒருமுறையாவது கைபேசி வழி தொடர்பு கொள்கிறார்கள்.
இந்நிலையில் அண்மையில் இந்திப் பட வாய்ப்பு ஒன்று விசாகாவை தேடி வந்திருக்கிறது. அதில் நடிக்க ஒப்புக் கொண்டவரிடம், மற்றொரு கதாபாத்திரத்துக்கு இன்னொரு நடிகையை தேடி வருவதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். உடனே தன் தோழி பிரியா ஆனந்தை சிபாரிசு செய்துள்ளார் விசாகா. அதை ஏற்றுக்கொண்ட படக்குழுவினர் உடனடியாக அவரையும் ஒப்பந்தம் செய்துவிட்டனராம். "இருவரும் ஒரே படத்தில் நடிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது," என்கிறார் விசாகா. தமிழில் வாய்ப்பு குறைந்துள்ள நிலையில், தன் தோழி மூலம் இந்திப் படத்தில் நடிப்பதால் பிரியா ஆனந்தும் உற்சாகத்தில் இருப்பதாகத் தகவல்.

