தொடக்கத்தில் கூச்சப்பட்ட கேத்தரின்

தொடக்கத்தில் கூச்சப்பட்ட கேத்தரின்

1 mins read
d4fd4d4a-70cc-4116-8481-8efcb131bbce
-

நடிகை ஆவதற்கு முன் கூச்ச சுபாவம் உள்ள பெண்ணாக இருந்தாராம் கேத்தரின் தெரசா. இவரது பெற்றோர் தான் பலவிதமாக அறிவுரை கூறி, ஊக்கமூட்டி கூச்ச உணர்வைப் போக்கியதாகச் சொல்கிறார். "தொடக்கத்தில் கேமரா முன் நிற்கவே பயப்படுவேன். ஆனால் நான் நடித்த படங்களுக்குக் கிடைத்த வரவேற்பால் தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரித்துள்ளன. "தற்போது என் நடிப்பில் 'கலகலப்பு -2' வெளியாகிறது. அதன் பின்னர் மேலும் பல புதுப் படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் தேடிவரும் என நம்புகிறேன்," என்கிறார் கேத்தரின்.