'குழந்தையைப்போல் பார்த்துக்கொண்ட சசிகலா'

'குழந்தையைப்போல் பார்த்துக்கொண்ட சசிகலா'

1 mins read
e9864317-cf34-4ff6-8271-5cdf71264c08
-

சென்னை: காலஞ்சென்ற முதல்வர் ஜெயலலிதாவை அவரது தோழி சசிகலா ஒரு குழந்தையைப்போல் பார்த்துக்கொண்டதாக தினகரன் ஆதரவாளர் புகழேந்தி கூறி உள்ளார். திருச்சியில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசிய அவர், ஜெய லலிதாவின் கடைசி காலத்தில் அவரது உருவம் உருக்குலைந்து விட்டதாகக் குறிப்பிட்டார். "தலைமைச் செயலகத்தில் முக்கிய நபருடன் பேசிக்கொண்டி ருந்தபோது தன்னையும் மறந்து ஜெயலலிதா உறங்கிவிட்டார். 2016, செப்டம்பர் 21ஆம் தேதி யன்று போயஸ் தோட்டத்தில் காரில் இருந்துகூட அவரால் இறங்க முடியவில்லை. சசிகலாவை அழைத்து வரச்சொன்னார்.

"சசிகலா வந்தவுடன் அவரிடம் ஜெயலலிதா தனது காலை காண் பிக்கிறார். அவரது காலணியில் புடவை சுற்றிக்கொண்டிருந்தது. அதைக்கூட அவரால் எடுக்க முடியவில்லை," என்றார் புகழேந்தி. தமிழக மக்கள் மீது அக்கறை செலுத்திய ஜெயலலிதா தனது உடல்நிலையைக் கவனிக்க தவறி விட்டதாகக் குறிப்பிட்ட அவர், வெற்றிவேல் வெளியிட்ட காணொளிப் பதிவில் ஜெயல லிதா நன்றாக இருப்பதை மக்கள் பார்த்துவிட்டனர் என்றார். அவர் வெளியிட்ட இத்தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.