பட்டம் தந்த ரசிகர்கள்: கண்டித்த சேதுபதி

பட்டம் தந்த ரசிகர்கள்: கண்டித்த சேதுபதி

2 mins read
60166276-c86b-41f8-94cc-6775bf92e4ed
-

தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருந்தால்கூட, வலிய இழுத்து வம்பில் மாட்டி விடுகிற உலகம் இது. அதை நன்கு புரிந்து வைத்துள்ளார் விஜய் சேதுபதி. அதனால்தான் தன் ரசிகர்களை அண்மையில் அழைத்துப் பேசியவர், ரசிகர் மன்ற நிர்வாகிகள் சிலரை கண்டித்திருக்கிறார். அது மட்டுமல்ல... தனக்கு அறவே பிடிக்காத சில விஷயங்களை தொடர்ந்து செய்து வந்தால், மன்றங்களைக் கலைத்துவிடப் போவதாகவும் எச்சரித்தாராம். என்ன ஆயிற்று என்பதுதானே உங்கள் கேள்வி? இதுதான் விஷயம். சில வாரங்க ளுக்கு முன்னர், முன்னாள் முதல்வர் எம்ஜிஆருடன் விஜய் சேதுபதி நிற்பது போல ஒரு சுவரொட்டியை சென்னை முழுவதும் ஒட்டினார்கள் அவரது ரசிகர்கள்.

அதில், 'வாழும் புரட்சித்தலைவர் விஜய் சேதுபதி' என்று பட்டமும் கொடுத்துவிட்டார்கள். விஷயம் சற்று தாமதமாக தான் சேதுபதிக்குத் தெரிய வந்ததாம். இதுதான் அவரது கோபத்துக்குக் காரணம். உடனே சம்பந்தப்பட்ட மன்ற நிர்வாகிகளை அழைத்துள்ளார். சூட்டோடு சூடாக அவர்களைக் கண்டித்த பிறகுதான் அமைதியானாராம்.

"நிறைய அன்பு செலுத்துவதாக நீங்கள் நினைக்கிறீர்கள். ஆனால், தேவையில்லாத வம்பை தான் விலை கொடுத்து வாங்குகிறீர்கள் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்," என அவர் பின்னர் தன்மையாகக் கூறியதை நிர்வாகிகளும் புரிந்து கொள்ள, அதன் பிறகு எல்லாம் சுபம். போகட்டும்... அப்படியே ஒரு நல்ல விஷயத்தையும் தெரிந்து கொள்வோம்.

விஜய் சேதுபதி நடிப்பில் தயாராகி உள்ள 'ஒரு நல்ல நாள் பார்த்து சொல்கிறேன்' படம் பிப்ரவரி முதல் வாரம் திரைக்கு வருகிறது. இவர் ஏற்கெனவே நடித்து சில ஆண்டுகளாக வெளியாகாமல் இருக்கும் 'இடம் பொருள் ஏவல்' படமும் விரைவில் வெளியாக உள்ளது. தற்போது '96', 'சூப்பர் டீலக்ஸ்', 'மாமனிதன்', 'ஜுங்கா', 'சீதகாதி' ஆகிய படங்களில் நடிக்கிறார். இதுதவிர தெலுங்கு, தமிழில் தயாராகும் 'சைரா நரசிம்ம ரெட்டி' படத்தில் நடிக்க இருக்கிறார்.

இதையும் சேர்த்தால் மொத்தம் படங்கள் விஜய்சேதுபதி கைவசம் உள்ளன. வேறுசில படங்களிலும் நடிக்க ஒப்புக் கொண்டுள்ள இவர், 2019 வரை கை நிறைய படங்களை வைத்திருக்கிறார் என்பது ரசிகர்களைரொம்பவே உற்சாகப்பட வைத்துள்ளது.