முத்தையா: சண்டையில் மட்டுமே தீவிரமாக இருந்தார் விஜயகாந்த்

முத்தையா: சண்டையில் மட்டுமே தீவிரமாக இருந்தார் விஜயகாந்த்

1 mins read
a90e8f00-1d2a-4bc3-ade9-9cc4bd73082d
-

பிரபல ஒளிப்பதிவாளர் பி.ஜி.முத்தையா இயக்குகிற படம் 'மதுர வீரன்'. விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டி யன்தான் இப்படத்தின் நாயகன். தனது மகன் நடிக்கும் படம் என்ப தற்காக விஜயகாந்த் எந்த விஷயத் திலும் தலையிடவில்லையாம். ஆனால் ஒரே ஒரு விஷயத்தை மட்டும் வலியு றுத்தியதாகச் சொல்கிறார் முத்தையா. "நான் ஒளிப்பதிவாளராகப் பல படங்களில் பணியாற்றியுள்ளேன். முத லில் ஒரு படம் இயக்க வேண்டும் என்று எண்ணிய போது நமக்கு தெரிந்த விஷயம், அல்லது நமது வாழ்க்கையில் நடந்த ஒரு விஷயத்தை படமாக எடுத்தால் சரியாக இருக்கும் எனக் கருதினேன்.

"அப்படித்தான் 'மதுர வீரன்' கதை உருவானது. இப்படம் ஜல்லிக் கட்டு பற்றிது மட்டும் அல்ல, அதன் பின்னணியில் நிகழும் அரசியலையும் மையப்படுத்தியே திரைக்கதை அமைந்துள்ளது. "அது மட்டும் அல்லாமல் கதாநாயகன் என்றால் நல்லது மட்டுமே செய்வது போன்றும், வில்லன் என்றால் கெட்டது மட்டுமே செய்வது போன்றும் காட்சிகள் இதில் இல்லை.