மடோனா மனம் கவர்ந்த இசையமைப்பாளர்

மடோனா மனம் கவர்ந்த இசையமைப்பாளர்

1 mins read
24681ea6-bd09-4ee6-9a56-83572a685272
-

மடோனா வீட்டில் விரைவில் கெட்டிமேளச் சத்தம் கேட்க வாய்ப்புள்ளதாம். இவரது நடிப்பில் அடுத்து கொம்பு வச்ச சிங்கம்டா வெளியாக உள்ளது. இதில் சசிகுமார் நாயகனாக நடித்து வரும் நிலையில், மடோனாவின் காதல் சங்கதி கசிந்துள்ளது. "நான் தற்போது கதைத் தேர்வில் கவனமாக இருக்கிறேன். எந்த வகையான படங்களைத் தேர்வு செய்ய வேண்டும் என்று எனக்குத் தெரியும். குடும்பத்தினருடன் நேரத்தைச் செலவிடவும் விரும்புகிறேன். "இசையமைப்பாளர் ராபி ஆபிரகாமுடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை நான்தான் சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டேன். சிலருடன் இருக்கும்போது மட்டும்தான் நாம் நாமாக இருக்க முடியும். அதுதான் உண்மையான சுதந்திரம். அப்படி ஒருவர் எனது வாழ்க்கையில் இருப்பது அதிர்‌ஷ்டம்," என்று அப்பதிவில் குறிப்பிட்டுள்ளார் மடோனா. இதையடுத்து இருவரும் காதலிப்பதாக கிசுகிசு பரவத் தொடங்கியது. எனினும் மடோனா அதனை மறுக்கவில்லை.