காதலின் இன்றைய நிலை குறித்துப் பேசும் படம்

காதலின் இன்றைய நிலை குறித்துப் பேசும் படம்

1 mins read
38e6b80c-379c-4cf3-bcfe-690b1ff0c036
-
Google News Preferred Icon

துரை இயக்கத்தில் சமுத்திரக்கனி, சாம் ஜோன்ஸ், அதுல்யா ரவி நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஏமாளி'. இன்றைய நவீன யுகத்தில் மனிதக் காதல் எப்படி இருக்கிறது என்பதை விரிவாகப் பேசுகிறதாம் இப்படம். "இந்த படத்துக்கு 'ஏமாளி' என்று தலைப்பு வைத்ததற்கு காரணம் இருக்கிறது. இன்றைய இளையர்கள் காதலை சாதாரண விஷயமாகப் பார்க்கிறார்கள். இரவு விருந் துகளில் பங்கேற்பது, வெளியிடங்களில் சுற்றித்திரிவது சாதாரணமாகிவிட்டது. அதைத்தான் இப்படத்தில் காட்டியுள்ளோம். "நாயகி அதுல்யா தொடர்பான காட்சிகள் பற்றி சில விமர்சனங்கள் வந்தன. ஆனால் கதைக்குத் தேவையான காட்சிகள்தான் இடம் பெற்றிருக்கின்றன," என்கிறார் துரை.