அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா நடிக் கும் புதிய படம் 'சொல்லிவிடவா'. இதில் இவருக்கு ஜோடியாக நடிப்பவர் புதுமுகம் சந்தன்குமார். இப்படத்தை இயக்குபவர் வேறு யாருமல்ல... அர்ஜுன்தான். தயாரிப்பாளரும் இவரே. படத்தைப் பற்றி சுவாரசியமாக விளக்குகிறார் அர்ஜுன். "இது நான் இயக்கும் 14ஆவது படம். இதுவரை அதிரடி, சண்டைக் காட்சிகள் நிறைந்த கதைகளில் நடித்தேன். நாயகனாகவும் கௌ ரவ வேடத்திலும் நடித்துவிட்டேன்.
"நான் இதுவரை இயக்கிய படங்களில் சமூக விழிப்புணர்வு, தேசபக்தி போன்றவையே மைய மான கருத்தாக இருந்தது. இப் போது நான் இயக்கும் 'சொல்லி விடவா' படத்தில் முதன் முறை யாக காதலுக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறேன். கூடவே தேசபக்தியும் இருக்கும் என்கிறார் அர்ஜுன்.
'சொல்லிவிடவா' படத்தில் சந்தன்குமார், ஐஸ்வர்யா.

