தொடரும் மிரட்டல்கள்: பார்வதி வேதனை

தொடரும் மிரட்டல்கள்: பார்வதி வேதனை

1 mins read
92d9e670-c91a-40c9-8bd1-847b1ab1bca7
-
Google News Preferred Icon

கருத்து சுதந்திரம் என்பது எல்லோருக்கும் இருக்கிறது என்றும், அதில் யாரும் குறுக்கிட முடியாது என்றும் கூறியுள்ளார் நடிகை பார்வதி. இந்திய குடிமகள் என்ற வகையில் தனது எண்ணங்களை வெளிப்படுத்த தனக்கு உரிமை இருக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார். மம்முட்டி நடித்துள்ள 'கசாபா' என்ற மலையாள படத்தில் பெண்கள் பற்றி வெறுப்பு உரையாடல்கள் அதிகம் இருப்ப தாக விமர்சித்து இருந்தார் பார்வதி. இதற்கு மம்முட்டி ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் சமூக வலைத் தளங்களில் பார்வதியை கடுமையாகச் சாடினார்கள்.

கொலை மிரட்டல்களும் வந்ததால், கேரள காவல்துறையில் புகார் அளித்தார் பார்வதி. இந்நிலையில் கொலை மிரட்டல்கள் தொடர்வதாகவும், இத்தகைய போக்கு தமக்கு வேதனை அளிப்பதாகவும் அவர் கூறியுள்ளார். "ஒரு திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள, பெண்களின் நிலை குறித்த எதிர்மறை வசனங்களை சுட்டிக்காட்டினேன். அதற் காக எனக்கு தொடர்ந்து கொலை மிரட்டல்கள் வருகின்றன. "சிலர் என்னைப் பற்றி பாலியல் ரீதியாகவும் விமர்சிக்கிறார்கள். மன்னிப்பு கேட்கும்படியும் வற்புறுத்துகின்றனர். "நான் யாரிடமும் மன்னிப்பு கேட்க மாட்டேன். எனக்கு திரைத்துறை மன உறுதியை கொடுத்து இருக்கிறது. எனது நடிப்பை விரும்பும் ரசிகர்கள் ஆதரவு தருவார்கள்," என்று பார்வதி மேலும் தெரிவித்துள்ளார்.