சக நடிகைக்கு பதிலடி கொடுத்த டாப்சி

சக நடிகைக்கு பதிலடி கொடுத்த டாப்சி

1 mins read
61dc687b-574b-4113-a938-7a84d14ce8bd
-

தன்னைப் பற்றி தவறாகப் பேசிய நடிகையுடன் இனி இணைந்து நடிக்கப் போவதில்லை என கூறியுள்ளார் டாப்சி. அவர் குறிப்பிட்டது ஜாக்குலின் பெர்னாண்டசை. இவர்கள் இருவரும் வருண் தவான் இரட்டை வேடங்களில் நடித்த 'ஜூட்வா-2' படத்தில் சேர்ந்து நடித்திருந்தனர். எனினும் படப்பிடிப்பின் போது இருவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது. இதையடுத்து டாப்சி குறித்து காட்டத்துடன் விமர்சித்தார் ஜாக்குலின். தயாரிப்பாளருடன் டாப்சி நெருக்கமாக இருப்பதாகவும், அதனால்தான் படத்தில் அவருக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டதாகவும் ஜாக்குலின் கூறினார்.

இதனால் கடும் அதிருப்தியில் இருந்த டாப்சி, தனக்கான வாய்ப்பு அமைந்தபோது ஜாக்குலினுக்கு பதிலடி கொடுத்துள்ளார். அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவரிடம், 'இனி எந்த நடிகையுடன் மீண்டும் சேர்ந்து நடிக்க மாட்டீர்கள்?' என்று கேட்கப்பட்ட கேள்விக்குப் பதில் அளித்த டாப்சி, "ஜாக்குலின் பெர்னாண்டஸ்" என்று திட்டவட்டமாகக் குறிப்பிட்டார். எனினும் பிறகு சற்றே சாந்தமாக, "ஏற்கெனவே நாங்கள் சேர்ந்து நடித்து விட்டோம். அதனால் இனி இணையத் தேவையில்லை," என்றும் டாப்சி கூறினார்.