பலவற்றை கற்றுத் தரும் தேநீர் கடை மேசை

பலவற்றை கற்றுத் தரும் தேநீர் கடை மேசை

1 mins read
9991c48a-fa4a-462d-acee-4f10f76363ef
-

அறிமுக இயக்குநர் ராம் ஷேவா இயக்கத்தில் உருவாகும் படம் 'டீக்கடை பென்ச்'. படத்தின் கதாநாயகன் ராமகிருஷ்ணா. நாயகி தரு‌ஷி. படத்தைப் பற்றிய சுவாரசியங் களை விளக்குகிறார் இயக்குநர். தனது சிறு வயதில் இருந்தே தான் அதிகம் புழங்கிய இடம் டீக்கடை எனப்படும் ஒரு தேநீர் கடைதான் என்றும், அங்குதான் பல புதிய விஷயங்களைத் தெரிந்து கொண்டதாகவும் கூறுகி றார் ராம் ஷேவா. "எல்லா ஊர்களிலும், எல்லா பகுதிகளிலும் இருக்கும் பொது வான இடம் என்றால் அது 'டீக்கடை பென்ச்' எனப்படும் தேநீர் கடை மேசைதான். இங்கு பலதரப்பட்ட மக்கள் வந்து தேநீர் குடித்தபடி பல விஷயங்களை விவாதிப்பார்கள்.

"சாமானிய மக்கள் அதிகம் புழங்கும் இடம் இது. சமூகம் தொடர்பான பிரச்சினைகளை விவாதிப்பது, தனிப்பட்ட மற்றும் குடும்ப விவகாரங்கள் பேசுவது, பிறர் விஷயங்களைப் புறம்பேசுவது, அரட்டை அடிப்பது எனப் பல விஷயங்கள் இங்கு நடக்கும். "சிறு வயதில் இருந்து நான் அதிகம் புழங்கிய இடம் இது. பல விஷயங்களை இங்கு கற்றுக் கொண்டேன் என்றும் சொல்லலாம். "ஒரு சமூகம் சார்ந்த காதலை மையமாக வைத்துப் படம் எடுக்க வேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசை.

'டீக்கடை பென்ச்' படத்தில் ராமகிருஷ்ணா, தரு‌ஷி.