அனைத்துலகத் திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட 'பேரன்பு' படத்துக்கு பார்வையாளர்களிடம் இருந்து நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ஒவ்வோர் ஆண்டும் நெதர்லாந்தில் நடந்து வரும் உலகத் திரைப்பட விழாவில் இதுவரை தமிழ்மொழித் திரைப்படங்கள் திரையிடப்பட்டதே இல்லை. இந்நிலையில், இந்தாண்டு இயக்குநர் பாலாவின் 'நான் கடவுள்', மிஷ்கின் இயக்கிய 'பிசாசு' ஆகிய படங்களைத் திரையிட்டுக்காட்ட, தமிழ் சினிமாவின் தரத்தைப் பார்த்து பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சினிமா ஆர்வலர்கள் அதிர்ந்துவிட்டனராம்.
கடந்த 28ஆம் தேதி 'பேரன்பு' திரைப்படம் சிறப்புக் காட்சியாகத் திரையிடப்பட்டது. படத்தின் இறுதிக்காட்சி முடிந்தபிறகு பார்வையாளர்கள் அனைவரும் எழுந்து நின்று 5 நிமிடங்கள் தொடர்ந்து கரவொலி எழுப்பிக்கொண்டே இருந்தனராம். அதன்பின் படக்குழுவினர் மேடையேற்றப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளனர். இத்தகவலை அப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ள சிறுமி சாதனா சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

