திரு இயக்கத்தில் உருவாகி வரும் 'மிஸ்டர் சந்திரமெளலி' திரைப்படம் எதிர்வரும் ஏப்ரல் 27ஆம் தேதி வெளியாக உள்ளது. இத்தகவலை அப்படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். இப்படத்தில் கார்த்திக்கும் அவரது மகன் கவுதமும் முதன் முறையாக இணைந்து நடிக்கின்றனர். ரெஜினா, வரலெட்சுமி சரத்குமார், சதீஷ், இயக்குநர் மகேந்திரன், இயக்குநர் அகத்தியன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்றுள்ளனர்.
சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வந்தது. ஒவ்வொரு நாளும் படப்பிடிப்பு முடிவடைந்தவு டன், இரவே படத்தொகுப்புப் பணியும் நடக்கிறது. எனவே, ஏப்ரல் 27ஆம் தேதி படத்தை திட்டமிட்டபடி வெளியிட முடியும் எனப் படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். ஒளிப்பதிவாளராக ரிச்சர்ட்நாதன், இசையமைப்பாளராக சாம், படத் தொகுப்பாளராக சுரேஷ் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.

