அதுல்யா ரவி: நான் விஜய் ரசிகை

அதுல்யா ரவி: நான் விஜய் ரசிகை

1 mins read
1b0ff93d-9930-47c0-9726-5d8258361fe6
-

"நான் முதலில் விஜய் ரசிகை. அதன்பிறகுதான் நடிகை," என்கிறார் இளம் நாயகி அதுல்யா ரவி. 'காதல் கண் கட்டுதே' படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் தற்போது பல படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். அண்மையில் வெளியான 'ஏமாளி'யும் இவருக்கு நல்ல பெயரைப் பெற்றுத் தந்துள்ளது. இந்நிலையில், தன்னை விஜய் ரசிகை என வெளிப்படையாகக் கூறியுள்ளார். விஜய் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் எந்தவிதமான தயக்கமும் இன்றி உடனே ஏற்றுக்கொள்ளப் போவதாகவும் தெரிவித்துள்ளார். "விஜய் சார் படம் என்று வந்தால் என்ன கதை, யார் இயக்குநர் என்றெல்லாம் யோசிக்கவேண்டிய அவசியமே இல்லை. கண்ணை மூடிக்கொண்டு ஒப்பந்தமாவேன். அவருடன் ஒரே ஒரு படத்திலாவது நடித்துவிட வேண்டும் என்பதே எனது விருப்பம். அது நிறைவேற காத்திருப்பேன்," என்கிறார் அதுல்யா ரவி.