'எங்க காட்டுல மழை'

'எங்க காட்டுல மழை'

1 mins read
bd0ad8fa-d9f1-4eeb-8fef-458f600c5cd2
-

வள்ளி பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகும் படம் 'எங்க காட்டுல மழை'. இதில் கதாநாயகனாக புதுமுகம் மித்துன் நடிக்கிறார். நாயகியாக சுருதி ராமகிருஷ்ணன் நடிக்கிறார். "தொடர்ந்து நல்ல வி ஷயங்கள் நடக்கும்போது 'எங்க காட்டுல மழை' என்று சொல்வது உண்டு. இது உற்சாகம் அளிக்கும் வார்த்தை. இந்தப் படத்தில் குடும்பக் கதையை நகைச்சுவை கலந்து கலகலப்பாக சொல்லி இருக்கிறோம். அதேபோல் 'கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போகும்' என்றும் சொல்வது உண்டு. அது போன்று விரும்பிய ஒன்று யார் கையில் கிடைத்தது என்பதே இப்படத்தின் கதை," என்கிறார் இயக்குநர் ஸ்ரீபாலாஜி.