நயன்தாரா தொடர்பாக வெளியாகும் தகவல்களை ஒருசேர படித்தால் எந்த வொரு ரசிகனுக்கும் குழப்பமும் தலை சுற்றலும் மட்டுமே ஏற்படும். அந்தளவு அவரைப் பற்றி முரண்பட்ட தகவல்களே வெளியாகின்றன. மூத்த நடிகர்களுடன் நடிக்க மாட்டார், இளையர்களுடன் ஜோடி சேர விரும்பவில்லை என அவரைப் பற்றி அண்மையில் இருவேறு தகவல்கள் வெளி யாகின. இத்தகைய சூழ்நிலையில் அஜித் நடிக்கவுள்ள 'விசுவாசம்' படத்தில் நயன்தாரா நாயகியாக ஒப் பந்தம் செய் யப்பட்டுள்ளார். 'பில்லா', 'ஏகன்', 'ஆரம்பம்' ஆகிய படங்க ளுக்குப் பிறகு 'விசுவா சம்' படத்தின் மூலம் நான்காவது முறையாக அஜித்துடன் இணைந்து நடிக்கிறார் நயன்தாரா.
இதற்கிடையே, சமூக வலைத்தளங்களை கலக் கிய 'லட்சுமி' மற்றும் 'மா' குறும்படங்களை இயக்கிய இயக்குநர் சர்ஜுன் இயக்கத்தில் நடிக்கவும் நயன் ஒப்பந்தமாகி உள்ளாராம்.

