இலியானா: பகிர்வதில் விருப்பம் இல்லை தனது தனிப்பட்ட வாழ்க்கையைப்

இலியானா: பகிர்வதில் விருப்பம் இல்லை தனது தனிப்பட்ட வாழ்க்கையைப்

1 mins read
8cb6c04d-7763-406a-966b-9dee7f225bea
-
Google News Preferred Icon

பாதுகாக்க விரும்புவதாகச் சொல்கிறார் நடிகை இலியானா. தனிப்பட்ட விஷயங்களைப் பகிர்ந்துகொள்வதில் தமக்கு விருப்பம் இல்லை என்றும் அவர் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுப் பேசும்போது தெரிவித்தார். 'ரெய்ட்' இந்தி திரைப்பட முன்னோட்ட வெளியீட்டு நிகழ்ச்சியில் இலியானா மேடையேறியபோது, "உங்களுக்கு திருமணம் ஆகிவிட்டதா?" என நடிகர் அஜய் தேவ்கன் கேள்வி எழுப்பினார். இதற்குப் பதிலளித்த போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார் இலியானா. "இந்தக் கேள்விக்கு வெளிப்படையாக என்ன சொல்வது என எனக்குத் தெரியவில்லை. தொழிலில் நான் சிறப்புடன் செயல்படுகிறேன். தனிப்பட்ட முறையிலும் நன்றாக செயல்பட்டு வருகிறேன். "எனது தனிப்பட்ட வாழ்க்கை தவிர்த்து மற்ற விஷயங்களை உலகத்தினர் கேட்கலாம், காணலாம்," என்றார் இலியானா. தமிழில் 'கேடி' படம் மூலம் நடிகையாக அறிமுகமான இவர், விஜய் உடன் 'நண்பன்' படத்தில் ஜோடியாக நடித்துள்ளார்.