ஒரு நடிகை எந்த கதாபாத்திரத்தில் தோன்றினாலும் அது சிறப்பாக இருந்தால் அதைப் பாராட்ட ரசிகர்கள் தயங்குவதே இல்லை எனக் கூறுகிறார் ரம்யா பாண்டியன். 'ஜோக்கர்' படம் மூலம் திரை யுலகில் கால்பதித்தவர் இவர். தற்போது 'ஆண் தேவதை' படத்தில் நடித்து வருகிறார். தாமிரா இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தின் மூலம் பல நுணுக்கமான விஷயங்களைக் கற்றுக் கொண்டாராம். குறிப்பாக சமுத்திரக் கனியுடன் நடித்தது மறக்க இயலாத அனுபவம் என் கிறார்.
"நான் அறிமுகமான 'ஜோக்கர்' படத்தில் எனக்கு கிராமத்துப் பெண் வேடம். ஆனால் இந்தப் படத்தில் அதற்கு நேர்மாறாக நகரத்தில் வாழும் நவநாகரிகப் பெண் கதாபாத்திரம். இது எனக்கு கொஞ்சம் சவாலாக இருக்கிறது எனக்கூடச் சொல்லலாம். "'ஜோக்கர்' படம் நல்ல விமர் சனங்களைப் பெற்றது. பலராலும் பாராட்டப்பட்டது. குறிப்பாக ரஜினி பாராட்டியது என் வாழ்வில் மறக்க முடியாது.

