சிம்புவுடன் மீண்டும் இணையும் ஓவியா

சிம்புவுடன் மீண்டும் இணையும் ஓவியா

1 mins read
4fe7bf63-f690-441a-8a72-52ed84cdd1d3
-
Google News Preferred Icon

சிம்புவும் ஓவியாவும் திருமணம் செய்துகொள்ள இருப்பதாக வெளியான தகவலில் உண்மை ஏதுமில்லை என சம்பந்தப்பட்டவர்களே தெளிவுபடுத்தி உள்ளனர். புத்தாண்டை முன்னிட்டு இருவரும் இணைந்து 'மரண மட்டை' என்ற பாடலை உருவாக்கி வெளியிட்டார்கள். இந்தப் பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதுவே இருவர் குறித்த வதந்திக்கும் காரணமாக அமைந்தது. இந்நிலையில் ஓவியா நடிக்க இருக்கும் புதிய படத்தின் மூலம் இருவரும் மீண்டும் இணைய இருக்கிறார்கள். இந்தப் படத்துக்கு சிம்புதான் இசையமைக்கிறார். இது நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படமாம். சந்தானம் நடிப்பில் வெளியான 'சக்க போடு போடு ராஜா' படத்தைத் தொடர்ந்து சிம்பு இசையமைக்கும் இரண்டாவது படம் இது. சிம்பு இசையில் ஏற்கெனவே ஒரு பாடலைப் பாடியுள்ளார் ஓவியா. அந்த நட்பு அடிப்படையில் ஓவியா படத்திற்கு இசையமைக்க ஒப்புக் கொண்டாராம் சிம்பு.