பெண்கள் பாதுகாப்பு: மஞ்சிமா கேள்வி

பெண்கள் பாதுகாப்பு: மஞ்சிமா கேள்வி

1 mins read
9a9ceed3-d5e5-4ff0-a85d-629db7fc4054
-
Google News Preferred Icon

பெண்களின் பாதுகாப்புக்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை என தமக்குத் தோன்றுவதாக நடிகை மஞ்சிமா மோகன் தெரிவித்துள்ளார். சக நடிகைகள் சனுஷா, அமலாபால் ஆகியோர் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லை குறித்து துணிச்சலுடன் போலிசில் புகார் தெரிவித்தனர். இதற்குப் பல்வேறு தரப்பினர் பாராட்டி உள் ள னர்.

இந்நிலையில் இதுகுறித்து தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் மஞ்சிமாமோகன். "முன்பைவிட இப்போது பெண்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்று நான் எனது சகோதரனிடம் தெரிவித்தேன். ஆனால், தற்போது நடக்கும் சில சம்பவங்களைப் பார்த்தால் நடவடிக்கை போதாது என்றே தோன்றுகிறது. பெண்களைப் போதைப் பொருளாகப் பார்ப்பதை நிறுத்த வேண்டும்," என்று தெரிவித்துள்ளார் மஞ்சிமா.