'நாச்சியார்' படத்தில் தாம் பேசிய வசனத்தில் இடம்பெற்றுள்ள சர்ச்சைக்குரிய வார்த்தை குறித்து நடிகை ஜோதிகா விளக்கம் அளித்துள்ளார். அக்குறிப்பிட்ட வார்த்தையைத் தாம் பேசியதால்தான் பெரும் சர்ச்சையாக உருவெடுத்து இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
"நடிகர்களில் யாரேனும் ஒருவர் அதைப் பேசி இருந்தால் யாரும் கண்டுகொண்டிருக்க மாட்டார்கள். படத்தின் முன்னோட்டக் காட்சிகளை மட்டுமே பார்த்துவிட்டு அதில் எனது பாத்திரம் குறித்து ஒரு முடிவுக்கு வராதீர்கள். படத்தைப் பார்த்துவிட்டு பேசுங்கள். "படத்தில் எனது கதாபாத்திரம், கதையின் சூழல் காரணமாக அந்த வார்த்தையைப் பயன்படுத்துவதாக சித்திரிக்கப்பட்டுள்ளது. படத்தை முழுமையாகப் பார்த்தால் மட்டுமே, அதில் நான் பேசிய வார்த்தை சரியானது என்பது ரசிகர்களுக்குப் புரியும்," என்கிறார் ஜோதிகா.

