முன்னோட்டத்தால் எழுந்த சந்தேகம்; இயக்குநர் விளக்கம்

முன்னோட்டத்தால் எழுந்த சந்தேகம்; இயக்குநர் விளக்கம்

1 mins read
3a38d1a8-bd05-47b9-9c72-62976adff8b3
-

கவுதம் கார்த்திக் நடிப்பில் வெளியாகி இருக்கும் 'இருட்டு அறையில் முரட்டு குத்து' படத்தின் முன்னோட்டம் ஹாலிவுட் படத்தின் தழுவல் என்று கூறப்படுவதை அதன் இயக்குநர் சந்தோஷ் பி ஜெயக்குமார் திட்டவட்டமாக மறுத்துள்ளார். கவுதம் கார்த்திக் நடிப்பில் சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்கத்தில் வெளியான படம் 'ஹரஹர மஹாதேவகி'. இது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதால் அதே கூட்டணி தற்போது 'இருட்டு அறையில் முரட்டு குத்து' என்ற படத்தை உருவாக்கி வருகிறது.

இப்படத்தின் முன்னோட்டம் அண்மையில் வெளியாக, ரசிகர்கள் மத்தியில் மீண்டும் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. எனினும், இப்படம் ஹாலிவுட் படத்தின் மறுபதிப்பு என்றும் ரசிகர்கள் மத்தியில் விவாதம் எழுந்தது. இதைத்தான் சந்தோஷ் பி ஜெயக்குமார் மறுத்துள்ளார். மேலும் இந்தப் படத்தில் ஆர்யா, சயீஷா சைகல் நடித்து இருக்கின்றனர். பெரியவர்கள் பார்க்கும் நகைச்சுவைப் படமாக உருவாகி வருகிறது. இந்தப் படத்தின் மூலம் மீண்டும் விட்ட இடத்தைப் பிடிக்கலாம் என்ற எதிர்பார்ப்பில் இருக்கிறாராம் ஆர்யா.