செய்தியாளர்கள் சந்திப்பை தவிர்த்த ஜோதிகா, பாலா

செய்தியாளர்கள் சந்திப்பை தவிர்த்த ஜோதிகா, பாலா

1 mins read
a81666af-44ab-436d-b011-45e53f349d43
-

பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்ப டுத்தி உள்ள 'நாச்சியார்' படம் திட்டமிட்டபடி வெளியாக இருக் கிறது. திருமணத்துக்குப் பின் மிக கவனமாக படங்களைத் தேர்வு செய்து வருகிறார் ஜோதிகா. அந்த வகையில் அவரது எதிர் பார்ப்புகளை முழுமையாகப் பூர்த்தி செய்யும் வகையில் உருவாகி இருக்கிறதாம் 'நாச்சியார்'. வழக்கமாக தன் படங்களை வெளியிடுவதற்கு முன் செய்தியா ளர்களைச் சந்திப்பார் பாலா. ஆனால் 'நாச்சியார்' விஷயத்தில் அப்படி நடக்கவில்லை. காரணம், செய்தியாளர்கள் சந்திப்புக்கு தம்மால் வர இயலாது என்று ஜோதிகா கூறிவிட்டதாகத் தகவல். படத்தின் முன்னோட் டத்தில் இடம்பெறும் ஒரு காட்சி யில் சர்ச்சைக்குரிய ஒரு வார்த் தையைப் பேசியிருப்பார் ஜோதிகா.

செய்தியாளர்கள் சந்திப்பின்போது அது குறித்து கேள்விகள் எழுப்பப்படும் என்பதாலேயே அவர் தவிர்த்தாராம். ஜோதிகாவின் இந்த முடிவை ஏற்றுக்கொண்ட இயக்குநர் பாலா வும் செய்தியாளர்களைப் படம் வெளியான பின் சந்தித்துக் கொள்ளலாம் என்று முடிவெடுத் துள்ளாராம். குழந்தைகளுக்கு நேரும் பாலியல் தொல்லைகள் குறித்து இந்தப் படத்தில் பேசப்பட்டிருப்ப தாகத் தகவல். அந்த சர்ச் சைக்குரிய வார்த்தைகூட இது தொடர்பாகவே படத்தில் இடம் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.

'நாச்சியார்' படத்தில் இடம்பெறும் ஒரு காட்சி.