ஊதியம், பட வாய்ப்புகள் ஆகியவற்றில் மட்டும் திரைக் கலைஞர்கள் இடையே போட்டி நிலவவில்லை. சமூக வலைத்தளத்தில் அவர்களை எத்தனை பேர் பின்பற்றுகிறார்கள் என்பதிலும் போட்டி நிலவுகிறது. இந்நிலையில், சூர்யாவை சமூக வலைதளத்தில் பின்பற்றுவோர் எண்ணிக்கை தற்போது 40 லட்சத்தைத் தாண்டியிருப்பதாகக் கூறப்படுகிறது. அண்மையில் வெளியான சூர்யாவின் 'தானா சேர்ந்த கூட்டம்' படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அடுத்து செல்வராகவன் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்நிலையில், டுவிட்டரில் சூர்யாவை பின்தொடர்வோர் எண்ணிக்கை 40 லட்சமாக உயர்ந்துள்ளது. சூர்யா படத்தில் நடிப்பது மட்டுமில்லாமல், அகரம் என்ற பெயரில் கல்வி அறக்கட்டளை ஒன்றையும் நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சமூக வலைத்தளத்தில் சூர்யாவை பின்தொடரும் 40 லட்சம் ரசிகர்கள்
1 mins read
-