சினிமாவில் நடிக்க இருப்பதாக தன்னைப் பற்றி சமூக வலைத்தளங்களில் வெளியான தகவலை திட்டவட்டமாக மறுத்துள்ளார் நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா. இவர் சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் ஊட்டச்சத்து நிபுணராகப் பணியாற்றுகிறார். இந்நிலையில் இவர் நடிகையாக விரும்புவதாக ஒரு தகவல் வெளியானது. இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார் திவ்யா. "சினிமாவில் நடிக்கவேண்டும் என ஆசைப்பட்டதே இல்லை.
கடந்த ஏழு ஆண்டுகளாக சென்னையில் உள்ள இரு மருத்துவமனைகளில் ஊட்டச்சத்து மருத்துவராகப் பணியாற்றி வருகிறேன். மேலும் ஊட்டச்சத்து குறித்த ஆய்வுப் படிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறேன். "சினிமா மீது எனக்கு அதீத மரியாதை உண்டு. அடிக்கடி படங்கள் பார்த்து ரசிப்பேனே தவிர, படங்களில் நடிக்கவேண்டும் என்ற எண்ணம் இல்லை. ஊட்டச்சத்து சம்பந்தப்பட்ட ஒரே ஒரு ஆவணப்படத்தில் மட்டுமே நடித்திருக்கிறேன்," என்கிறார் திவ்யா.

