அமெரிக்காவில் உருவான தமிழ்ப்படம் 'காவியன்'

1 mins read
6d48163c-d233-4563-9d04-8eb351156ff6
-

முழுக்க முழுக்க அமெரிக்காவிலுள்ள லாஸ்வேஹாசில் ஹாலிவுட் தரத்தில் உருவாகியுள்ள முதல் தமிழ் திரைப்படம் 'காவியன்' என்கிறார் அதன் தயாரிப்பாளர் கே.வி.சபரீஷ். சாரதி இயக்கத்தில் ஷாம், ஆத்மியா, ஸ்ரீதேவி குமார் நடித்துள்ள படம் இது. தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி உள்ளது. ஜெஸ்டின் விகாஸ் வில்லனாக நடித்துள்ளார். "படத்தில் இடம்பெற்றுள்ள சண்டைக் காட்சிகளும் திரைக்கதையும் தொடக்கம் முதல் இறுதிவரை பிரமிக்கும் வகையில் இருக்கும். மிகுந்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ள 'காவியன்' விரைவில் வெளியாகும்," என்கிறார் சபரீஷ்.