காத்திருந்து சாதித்த விமல்

1 mins read
b76836b9-543e-48b3-a734-52b85e24650e
-

தனது நடிப்பில் அடுத்தடுத்து ஐந்து படங்கள் வெளியாக இருப்பதாக உற்சாகத்துடன் தெரிவித்துள்ளார் நடிகர் விமல். 'மன்னர் வகையறா' படத்தின் வெற்றி இவருக்கு புது நம்பிக்கையை அளித்துள்ளது. விமல் நடிப்பில் வெளியான சில படங்கள் வசூல் ரீதியில் வெற்றி பெற வில்லை. இதையடுத்து இவரது சந்தை மதிப்பு இறங்கியது. "இனி விமல் அவ்வளவுதான்," என்றும் கோடம்பாக்கத்தில் சிலர் தகவல் பரப்பினர். இத்தகைய சூழ் நிலையில்தான் 'மன்னர் வகையறா' படத்தில் ஒப்பந்தமானார் விமல். இதையடுத்து, "பூபதி பாண்டியன் இயக்கும் படங்கள் சோடை போகாது, இந்தப் படம் நிச்சயம் வெற்றி பெறும். அதன்பிறகே புதுப்படங்களை ஒப்புக் கொள்வேன்," என விமல் திட்ட வட்டமாக அறிவித்தார்.

அவரது நம்பிக்கையும் காத்திருப்பும் வீண் போகவில்லை. இப்போதெல்லாம் ஒரு படம் திரையரங்குகளில் ஒரு வாரம் தாக்குப்பிடித்தாலே பெரிய விஷ யம். இந்நிலையில் 'மன்னர் வகையறா' மூன்றாவது வாரத்தில் அடியெடுத்து வைத்து 50 திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கி றது என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து 5 புதுப்படங்களில் ஒப்பந்தமாகி உள்ளார் விமல். 'வெற்றிவேல்' இயக்குநர் வசந்த மணி, ஏ.ஆர்.முருகதாஸின் உதவி யாளர் அசோக், குறும்பட இயக்குநர் விஜய் உட்பட இன்னும் இரண்டு இயக்குநர்களின் படங்களில் நடிக்க உள்ளார்.

'மன்னர் வகையறா' படத்தில் விமல், கயல் ஆனந்தி.