விக்ரம் பிரபுவுக்கு கோபத்தை ஏற்படுத்திய 'பக்கா' படப்பிடிப்பு சம்பவம்

விக்ரம் பிரபுவுக்கு கோபத்தை ஏற்படுத்திய 'பக்கா' படப்பிடிப்பு சம்பவம்

1 mins read
8c1c283b-aace-4414-9dc7-9011d644de17
-

விக்ரம் பிரபு, நிக்கி கல்ராணி, பிந்து மாதவி உள்ளிட்டோர் நடித்துள்ள படம் 'பக்கா'. இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது. இதில் விக்ரம் பிரபு பங்கேற்காதது பலரையும் ஆச்சரியப்படுத்தியது. அதற்கான காரணம் தற்போது தெரியவந்துள்ளது. படப்பிடிப்பின் போது நடந்த சம்பவம் விக்ரம் பிரபுவுக்கு இயக்குநர் மீது கடும் அதிருப்தியை ஏற்படுத்தியதாம். இதன் காரணமாக இயக்குநருடன் பேசுவதையே நிறுத்திவிட்டாராம். இயக்குநர் மேற்கொண்ட சமாதான முயற்சிகள் பலன் அளிக்கவில்லை. அவர் மீதான கோபத்தின் வெளிப்பாடாகத்தான் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் விக்ரம் பிரபு பங்கேற்கவில்லை எனக் கூறப்படுகிறது.