இயக்குநர் கவுதம் மேனன், சிம்பு இருவரும் மீண்டும் இணைந்திருக்கி றார்கள். இவர்களது கூட்டணியில் உருவாகும் படத்துக்கு 'ஒன்றாக' எனத் தலைப்பு வைத்துள்ளனர். ஏற்கெனவே கவுதம் மேனன் இயக்கத்தில் 'விண்ணைத் தாண்டி வருவாயா' படத்தில் நடித்திருந்தார் சிம்பு. அப்படத்தில் அவர் ஏற்ற கதாபாத்திரத்தை மையமாக வைத்தே புதிய படத்தை உருவாக்க திட்ட மிட்டுள்ளாராம் கவுதம். அப்புதிய படத்தில் சிம்புவுடன் தெலுங்கு, மலையாளம், கன்னட திரையுலகத்தைச் சேர்ந்த மூன்று நாயகர்களும் இணைய உள்ளனர். "இது 'விண்ணைத் தாண்டி வரு வாயா' படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகிறது. மீண்டும் சிம்புவுடன் இணைந்து நடிக்கிறார் அனுஷ்கா.
முதல் பாகத்தில் 'ஜெஸ்ஸி' என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மனதைக் கொள்ளை கொண்ட திரிஷா, இந்த முறை கௌரவ வேடத்தில் தோன்றுகிறாராம். "தற்போது 'என்னை நோக்கி பாயும் தோட்டா', 'துருவ நட்சத்திரம்' உள்ளிட்ட படங்களில் கவனம் செலுத்தும் கவுதம், அவற்றை முடித்த பின் சிம்பு படத்தை இயக்குவார்," என கவுதம் மேனன் தரப்பு தெரிவிக்கிறது. கவுதம் மேனனுடன் மீண்டும் சிம்பு கூட்டணி அமைத்திருப்பது அவரது ரசிகர்களை உற்சாகமடைய வைத்துள்ளது.

