3 தோற்றங்களில் அசத்த வரும் லட்சுமி

3 தோற்றங்களில் அசத்த வரும் லட்சுமி

1 mins read
a717f527-6242-43a9-8f47-3b2757c193b7
-
Google News Preferred Icon

கடந்த ஆண்டு இந்தி திரையுலகில் கால்பதித்த ராய் லட்சுமி மீண்டும் கோடம்பாக்கம் திரும்பி உள்ளார். தமிழில் உருவாகும் 'நீயா-2' படத்தில் இவரும் ஒரு கதாநாயகியாம். ஜெய் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் வரலட்சுமி, கேத்தரீன் தெரசாவும் நடித்துள்ளனர். "ஏறத்தாழ 40 ஆண்டுகளுக்கு முன் உருவான 'நீயா' படத்தின் இரண்டாம் பாகமும் பாம்புகளை மையப்படுத்தி உருவாகிறது. "இதில் மூன்று வித்தியாசமான தோற்றங்களில் நடிக்கிறேன்.

கடந்த காலம், நிகழ் காலம், எதிர்காலம் என மூன்று கட்டங்களாக கதை நகரும். மூன்று நாயகிகளும் மூன்று காலகட்டங்களில் வருகிறோம். "முதல் பாகத்தைப் போலவே 'நீயா 2' ரசிகர்களை மிரள வைக்கும். அந்தளவுக்கு திரைக்கதை விறுவிறுப்பாக இருக்கும். "இந்திப் படங்களில் தொடர்ந்து நடிப்பேன். எனது இரண்டாவது இந்திப் படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும். மலையாளத்தில் மம்முட்டியுடன் இணைந்து மீண்டும் ஒரு படத்தில் நடிக்கிறேன். அவருடன் தொடர்ந்து நடிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது," என்கிறார் ராய் லட்சுமி.