ஏமி ஜாக்சனை அடுத்து மேலும் ஒரு வெளிநாட்டு நடிகை கோடம்பாக்கத் துக்கு வந்துள்ளார். அவர் எல்லி அவ்ரம். வட இந்திய ரசிகர் களுக்கு இவர் ஏற்கெ னவே அறிமுகமானவர். தொலைக்காட்சித் தொடர் களில் இவரது நடிப்பை வெகு வாக ரசித்துப் பா ரா ட் டு கின்றனர். இந்நிலையில் 'பாரிஸ் பாரிஸ்' படம் மூலம் ஒரே சமயத்தில் தமிழ், கன்னடத் திரையுலகில் அறிமுகமாகிறார். எல்லியின் பூர்வீகம் ஸ்வீடன். கிரீஸ் நாட்டுடனும் ஒரு வகையில் தொடர்புள்ளவர். நேரில் சந்தித்துப் பேசுபவர், தமிழகத்தைச் சேர்ந்தவர் என்றால், உடனடியாக 'எப்படி இருக்கிறீர்கள்?' என்று அழகு தமிழில் கேட்டு அசத்துகிறார் எல்லி.
ஒருவேளை நாம் அவரை ஆங்கிலத்தில் நலம் விசாரித்தால், 'நன்றாக இருக்கிறேன்' என்று தமிழில் பதில் அளிக்கிறார். எப்படி தமிழ் பேச முடிகிறது? "என்னால் அதிகம் பேசிவிட முடியாது. படத்தில் இடம்பெறும் வசனங்களைக் கேட்டால் ஒப்பிப்பேன். அதேசமயம் இந்த வசனங்களுக் குள் நுழைந்து அர்த்தத்தைப் புரிந்துகொண் டால் என்னால் வெகு விரைவில் தமிழ் மொழியைக் கற்றுக்கொள்ள முடியும் என நம்புகிறேன். "ஏனெனில் தமிழ் மிக வசீகரமான, நேசிக்க வைக்கும் அற்புதமான மொழி. அதனால் தமிழில் நடிப்பதை விருப்பத்துடன் செய்கிறேன்," என்கிறார் எல்லி.

