நடிகர்களுடன் தனுஷ் பேச்சுவார்த்தை

1 mins read
849731f3-7e7e-4642-ba1c-3edc5421df00
-

தனது இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்கக் கேட்டு தெலுங்கு, கன்னட திரையுலக முன்னணி நடிகர்களிடம் தனுஷ் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. நடிப்புடன் தற்போது இயக்கத்திலும் கவனம் செலுத்தி வருகிறார் தனுஷ். அவரது நடிப்பில் உருவாகும் 37வது படத்தை ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இதில் முக்கிய வேடத்தில் நடிப்பதற்காக கன்னட நடிகர் சுதீஷை அணுகி உள்ளாராம். இதேபோல் தெலுங்கு நடிகர்கள் சிரஞ்சீவி, நாகார்ஜுனாவுடனும் அவர் பேசியதாக தகவல். இப்படத்தின் படப்பிடிப்பு மே மாதம் துவங்க உள்ளது. இம்மாத இறுதிக்குள் நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்களின் தேர்வு முடிந்துவிடுமாம். தற்போது வெற்றி மாறன் இயக்கத்தில் 'வடசென்னை', கௌதம் மேனன் இயக்கத்தில் 'எனை நோக்கி பாயும் தோட்டா' ஆகிய படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் தனுஷ். இவர் இயக்கிய 'பா. பாண்டி' படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது குறிப்பிடத்தக்கது.