கூடுதல் சம்பளம் கேட்கும் விக்ரம்

கூடுதல் சம்பளம் கேட்கும் விக்ரம்

1 mins read
Google News Preferred Icon

நடிகர் விக்ரம் நடிப்பில் 300 கோடி ரூபாய் செலவில் படம் எடுக்க ஒரு தரப்பு தயாராகி வருகிறது. ஆனால் அவரோ கௌதம் மேனன் தனது கால்‌ஷீட்டை வீணடித்து விட்டதாகப் புலம்பிக் கொண்டிருக்கிறாராம். அது மட்டுமல்ல, கௌதம் இயக்கத்தில் நடித்த வகையில் தனக்கு கூடுதல் சம்பளம் வழங்க வேண்டும் என்றும் நச்சரித்து வருகிறாராம்.

கடந்த கால கஷ்ட நஷ்டங்களில் இருந்து இப்போது தான் ஓரளவு மீண்டு வந்துள்ளார் கௌதம். 'துருவ நட்சத்திரம்' படப்பிடிப்புக்காக ஒதுக்கப்பட்ட பணத்தைக் கொண்டு தான் சில கடன்களை அவர் அடைத்திருப்பதாகக் கூறப்படுகிறது. அதே சமயம் 'துருவ நட்சத்திரம்' கிடப்பில் போடப்பட்டதால் தான் விக்ரமுக்கும் சோதனை. இருவருக்கும் இடையே சிலர் பேச்சுவார்த்தை நடத்தி நிலைமையை சுமூகமாக்க முயற்சிப்பதாகத் தகவல்.