தொலைக்காட்சித் தொடரில் ஆர்யா

தொலைக்காட்சித் தொடரில் ஆர்யா

1 mins read
a3243584-6e0a-4f70-8a3c-12913ec6c605
-
Google News Preferred Icon

தன்னைத் திருமணம் செய்துகொள்ள விரும்புவதாக விண்ணப்பித்த பெண்களில் 16 பேரை மட்டும் தேர்ந்தேடுத்து அவர்களை வைத்து ஒரு தொலைக் காட்சித் தொடரை எடுக்கிறார் நடிகர் ஆர்யா. அதில் ஆர்யாதான் நாயகன். வருகிற பிப்ரவரி 19ஆம் தேதி முதல் 'கலர்ஸ் டிவி'யில்தான் இந்த தொலைக் காட்சித் தொடர் ஒளிபரப்பாக உள்ளது. மேலும், இந்த 16 பெண்களில் ஒருவரைத்தான் ஆர்யா திரு மணம் செய்துகொள்ளப் போவதாகச் சொல்கிறார்கள். ஆனால் இந்தச் செய்தி உண்மையா? இல்லை புதிதாக வரும் தொலைக்காட்சித் தொடர் பரபரப்பாகப் பேசப்படவேண்டும் என்பதற்காக அந்தத் தொடரை வெளியிடும் தொலைக்காட்சி நிறுவனம் நடத்தும் நாடகமா என்பது போகப் போகத்தான் தெரியும் என்கிறது கோலிவுட்.