நகைச்சுவை நடிகர் ஜெகன் நாயகனாக நடிக்கும் படம் 'எனக்கு இன்னும் கல்யாணம் ஆகலே'. இதில் அவரது ஜோடியாகியுள்ளார் மோனிகா. முக்கிய வேடத்தில் கவிஞர் பிறைசூடன், சேரன் ராஜ், சாம்ஸ், விவேக் ராஜ் உள்ளிட்டோர் நடிக்கி றார்கள். இவர்களுடன் லட்சுமி என்ற பசுமாடு முக்கியத்துவமுள்ள வேடத்தில் அசத்தி உள்ளதாம். கே.ஆர்.கவின் சிவா இசைய மைக்க, காரைக்குடி நாராயணன் கதை, வசனம் எழுத, முத்து விநா யகா மூவிஸ் நிறுவனத்தின் சார்பில் ராஜாமணி தியாகராஜன் இப் படத்தை தயாரிக்கிறார்.
முருகலிங் கம் இயக்குகிறார். "இது முழுக்க முழுக்க நகைச் சுவைப் படம். கதையின் நாயகனான ஜெகன் பயந்த சுபாவம் உள்ளவர். ஆனால் அவர் செய்யும் காரியங்கள் சாகச ரகம். கதைப்படி கந்து வட்டித் தொழில் செய்யும் பிறைசூடனின் மகளை இளைஞன் ஒருவர் காத லிக்கிறார். இதையறிந்த பிறைசூடன் தனது அடியாட்களை அனுப்பி காதல் ஜோடியைக் கொலை செய்ய முயல்கிறார்.
'எனக்கு இன்னும் கல்யாணம் ஆகலே' படத்தில் ஒரு காட்சி.

