'எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தில் இயக்குநர் சசிகுமார் சிறப்பு கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் தனுஷ் கதாநாயகனாக நடிக்க, கவுதம் மேனன் இயக்குகிறார். படத்தின் நாயகி மேகா ஆகாஷ். மேலும் ராணா டகுபதி, சுனைனா இருவரும் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்றுள்ளனர். இந்நிலையில் இப்படத்தில் சிறப்புத் தோற்றத்தில் சசிகுமாரை நடிக்க வைக்கலாம் என தனுஷ் இயக்குநரிடம் கூறினாராம். அதை கவுதமும் ஏற்றுக்கொள்ள, தற்போது சசியுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. 'எனை நோக்கி பாயும் தோட்டா'வில் இன்னும் சில காட்சிகளை மட்டுமே எடுக்க வேண்டியுள்ளதாம். அடுத்த சில வாரங்களில் அனைத்துப் பணிகளையும் முடித்து மே மாதம் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாகத் தகவல்.
தனுஷ் படத்தில் நடிக்கும் சசிகுமார்
1 mins read
-

