நிறைவேறியது நிகிஷாவின் ஆசை

நிறைவேறியது நிகிஷாவின் ஆசை

1 mins read
5fe6c291-2327-4812-a93b-b9aacadbb65d
-
Google News Preferred Icon

அழகும் அறிவும் அனுபவமும் மட்டும் ஒரு நடிகையை முன்னணிக்கு கொண்டுவரப் போதாது என்கிறார் நிகிஷா படேல். கடந்த ஏழு ஆண்டுகளாக தமிழிலும் தெலுங்கிலும் முழுத்திறமையைக் காட்டியும் கூட இன்னும் தன் இருப்பை தக்க வைத்துக்கொள்ள போராடிக் கொண்டிருக்கிறார் இவர். இத்த னைக்கும் கவர்ச்சி காட்டுவதில் எந்தவித குறையும் வைக்காதவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தமிழில் 'தலைவன்', 'என்னமோ ஏதோ' படங்களில் தலைகாட்டியவர் இப்போது 'கரையோரம்', 'நாரதன்', '7 நாட்கள்' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். தெலுங்கில் அதிரடி கதாபாத்திரம் ஒன்றில் ஒப்பந்தம் ஆகியிருக்கிறாராம். முகுல்தேவ் வில்லனாக நடிக்கும் இந்தப் படத்தின் மூலம் தென்னிந்தியாவின் முன்னணி நட்சத்திரமாக மிளிர முடியும் என்று நம்புகிறாராம். "அந்தப் படத்தில் குத்துச்சண்டை வீராங்கனையாக நடிக்கிறேன். நீண்ட காலமாகவே அதிரடி வேடங்களில் நடிக்க வேண்டுமென்ற ஆசை இருந்தது. அது நிறைவேறியிருக்கிறது," என்கிறார் நிகிஷா.