கடந்த ஜனவரியில் விமல் நடித்த 'மன்னர் வகையறா' படம் வெளியாகி 25 நாட்களாக வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. அதன்பிறகு வெளி யான படங்கள்கூட திரையரங்கில் இருந்து வெளியேறிவிட்ட நிலை யிலும் போட்டிக்கு புதிதாக பல படங்கள் வெளியான நிலையிலும் 'மன்னர் வகையறா'வுக்கான வரவேற்பு இன்னும் குறையவே இல்லை என்கிறார்கள் விநி யோகிப்பாளர் "மிகச்சிறந்த நடிப்பை வெளிப் படுத்திய விமலும் படத்தை இயக்கிய பூபதி பாண்டியனும் இந்த வெற்றிக்கு முக்கிய காரணம். என்றாலும், வெற்றிக்கான முக்கிய தூணாக இருந்து வருப வர் விநியோகஸ்தரும் தயாரிப்பா ளருமான சிங்காரவேலன். "குறிப்பாக 'மன்னர் வகை யறா' பட வெளியீட்டின் போது விமலின் 'ஜன்னலோரம்' பட இழப்பீடு விவகாரம் தலைதூக்க, தனது கையில் இருந்து 2 கோடி ரூபாய் உதவியுள்ளார் சிங்கார வேலன்," என்கிறது விமல் தரப்பு.
'கன்னி ராசி' படத்தில் விமல், வரலட்சுமி.

