காதலின் முக்கியத்துவத்தை அலசும் படம் '100% காதல்'

1 mins read
12327316-0f6e-4c31-9901-4a08224f7fdf
-

தெலுங்கில் வெற்றி பெற்ற '100% லவ்' என்ற படத்தின் மறுபதிப்பு தான் '100% காதல்' என்ற தலைப்பில் தமிழில் உருவாகிறது. படத்தின் கதாநாயகன் ஜி.வி.பிரகாஷ். இதில் இவருக்கு ஜோடியாக நடிப்பவர் ஷாலினி பாண்டே. கதை, திரைக்கதை எழுதி இருப்பவர் சுகுமார். படத்தை இயக்குபவர் சந்திரமவுலி. ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் காதல் என்பது முக்கியமான ஒன்று என்றும் அந்தக் காதலுக்கான முக்கியத்துவம் குறித்தும் இப்படம் அலுசும் என்றும் கூறியதுடன் படத்தில் நகைச்சுவைக்குப் பஞ்சமில்லை என்கிறார் இயக்குநர். சதீஷ், யோகி பாபு, லிவிங்ஸ்டன் ஆகியோர் நகைச்சுவையில் கலக்குவார்களாம். நாசர் முக்கிய வேடம் ஏற்கிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு அம்பிகா மீண்டும் இதில் நடித்துள்ளாராம். முக்கிய காட்சிகள் லண்டனில் படமாக்கப்பட்டுள்ளன. இசையமைப்பாளர் வேறு யாருமில்லை. நாயகன் ஜி.வி.பிரகாஷ்தான். விரைவில் படம் திரைகாணும் என்கின்றனர் படக்குழுவினர்.