'மெர்சல்' திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றிருந்தாலும் வசூல் ரீதியில் தயாரிப்பு தரப்புக்கு எந்தவித குறையும் வைக்கவில்லை. இந்நிலையில் இப்படம் புரிந்துள்ள பல்வேறு சாதனைகளைத் தொகுத்து அப்படக்குழுவினர் வெளியிட்டுள்ள னர். தென்னிந்திய திரையுலகில் ஒரே நாளில் ரசிகர்களால் அதிகமாகப் பார்க்கப்பட்ட முன்னோட்டம் 'மெர்சல்' படத்தினுடையதுதான். இதை ஒரே நாளில் 11.21 மில்லியன் பார்வையாளர் கள் கண்டு ரசித்துள்ளனர். இதேபோல் 'யூடியூப்' இணையத் தளத்தில் அதிகமானோரால் பார்க்கப் பட்டு 'லைக்' (விரும்பப்பட்ட) பெற்ற படமும் 'மெர்சல்'தான்.
இணையத்தில் வெளியிடப்பட்டதும் குறுகிய நேரத்தில் மிக அதிகமானோர் இப்படத்தின் பாடலை தாங்கள் மிகவும் விரும்புவ தாகக் குறிப்பிட்டிருந்தனர். இப்படத்தின் பாடல் காணொளித் தொகுப்பு இணையத்தில் வெளியிடப் பட்டபோது குறுகிய நேரத்தில் 70 மில்லியன் ரசிகர்கள் அதைக் கண்டு ரசித்துள்ளனர். 'மெர்சல்' படத்தின் விளம்பரப் பாடலுக்கும் ரசிகர்கள் மத்தியில் அபரிமிதமான வரவேற்பு கிடைத்தது. கேரளாவில் 21.9 கோடி ரூபாய் வசூல் பெற்று சாதித்த பெருமையும் 'மெர்சல்' படத்துக்கு உண்டு. 'மெர்சல்' படத்தின் குறிப்பிட்ட இரு பாடல்களின் காணொளித் தொகுப்பை இணையத்தில் வெளி யிட்டபோது, அவற்றை ஒரு மில்லியன் பார்வையாளர்கள் மிகவும் விரும்புவ தாக குறிப்பிட்டுள்ளதும் ஒரு சாதனை தான் என்று படக்குழுவினர் தெரிவிக் கின்றனர்.
'மெர்சல்' படத்தில் இடம்பெறும் காட்சியில் விஜய், காஜல் அகர்வால்.

