'நட்புனா என்னானு தெரியுமா'

'நட்புனா என்னானு தெரியுமா'

1 mins read
efa7332e-e089-4e80-943c-7195534b72a3
-
Google News Preferred Icon

நட்பின் முக்கியத்துவத்தை விளக்கும் படமாக உருவாகி வருகிறது 'நட்புனா என்னானு தெரியுமா'. இதில் கவின் நாயகனாகவும் ரம்யா நம்பீசன் நாயகியாகவும் நடிக்கிறார்கள். படத்தை இயக்குபவர் சிவா அரவிந்த். தரண் இசையமைக்கிறார். நட்பை முன்னிறுத்தி பல படங்கள் வந்திருந்தாலும் மாறுபட்ட திரைக்கதையுடன் நகைச்சுவை கலந்த படமாக இது உருவாகி வருவதாகக் கூறுகிறார் இயக்குநர். மொட்டை ராஜேந்திரன், மன்சூர் அலிகான், அருண்ராஜா காமராஜ் ஆகியோர் கூட்டணியில் நகைச்சுவைக் காட்சிகள் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்குமாம்.