ரெஜினா: நான் பெரிய நடிகையல்ல

ரெஜினா: நான் பெரிய நடிகையல்ல

1 mins read
cbb5b9ea-fc7d-44e4-b4ca-f99f5a91942c
-
Google News Preferred Icon

ஒரு வழியாக டோலிவுட்டில் கால்பதித்து, அங்கு தான் நடித்த படம் வெளியாக இருப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைவதாகத் தெரிவித்துள்ளார் இளம் நாயகி ரெஜினா. அவரது நடிப்பில் உருவாகி வரும் 'ஏக் லட்கி கோ தேகா தோ ஏய்சா லகா' ஷெல்லி சோப்ரா இயக்கத்தில் வேகமாக வளர்ந்து வருகிறது. சோனம் கபூர், ராஜ்குமார் ராவ், அனில் கபூர், ஜுஹி சாவ்லா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்க, வினோத் சோப்ரா தயாரித்துள்ள இந்தப் படம் இந்த ஆண்டு மத்தியில் வெளியாக உள்ளது.

இதற்கிடையே ரெஜினா நடித்து வெளியான 'ஆவ்' தெலுங்குப் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாம். இதையடுத்து தமிழில் 'பார்ட்டி', 'நெஞ்சம் மறப்பதில்லை', 'மிஸ்டர் சந்திரமவுலி' உள்ளிட்ட படங்களில் நடித்துவருகிறார். "என்னை பெரிய நடிகையாக நான் கருதுவதில்லை. அதே சமயம் நான் நடித்த படங்கள் வசூல் ரீதியில் வெற்றிபெறும் போது நமக்கும் ரசிகர்களிடம் அங்கீகாரம் கிடைத்துள்ளதாக கருதிக்கொள்வேன். அந்த உற்சாகமே என்னை மிகுந்த சுறுசுறுப்பாகவும் நம்பிக்கையுடனும் செயல்பட வைத்திருக் கிறது," என்கிறார் ரெஜினா.