கோடம்பாக்கத்தில் அடுத்து நடிகை அஞ்சலி வீட்டில் தான் கெட்டிமேளம் சத்தம் கேட்கும் என்று பரவலாகப் பேசப்பட்டது. ஆனால் யார் கண்பட்டதோ தெரியவில்லை. இவருக்கும் ஜெய்க்கும் இடையேயான காதல் முறிந்து போனது. திருமணம் செய்து கொள்வார் கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வெளிப்படையாக அறி விக்காமல் இருவரும் சத்தமின்றி பிரிந்துவிட்டதாக தகவல். தற்போது ஆந்திராவிலேயே தங்கியிருந்து தெலுங்குப் படங்க ளில் நடித்துக் கொண்டிருக்கிறார் அஞ்சலி. கடந்த ஒன்றிரண்டு ஆண்டுகளாக தனக்கு வாய்ப்பு கள் அமையாவிட்டாலும் அது குறித்து கவலைப்படாமல் தெரிந் தவர்களிடம் எல்லாம் அஞ்சலிக் காக சிபாரிசு செய்து வந்தாராம் ஜெய்.
இப்போதோ, நிலைமை தலை கீழ். தனது படங்களில் கூட அஞ்சலிக்காக எந்தவித சிபாரி சும் ஜெய் செய்வதில்லை. 'பலூன்' படமே இருவரும் இணைந்து நடித்த கடைசிப் பட மாக இருக்கக்கூடும் என்கிறார் கள் விவரமறிந்தவர்கள். தற்போது 'நீயா-2' படத்தில் நடிக்கும் ஜெய்க்கு இரு ஜோடி கள். வரலட்சுமி சரத்குமார், கேத்தரீன் தெரசா ஆகியோருக்கே அந்த வாய்ப்புகள் கிடைத்தன. மூன்றாவது நாயகியாக ராய் லட்சுமி நடிக்கிறார். மூன்று நாயகிகள் என்பதால் ஜெய் சிபாரிசு செய்திருக்கும் பட் சத்தில் அஞ்சலியும் இப்படத்தில் நடிப்பதற்கான வாய்ப்புகள் பிரகா சமாக இருந்தன. ஆனால் ஜெய் தரப்பில் இதற்கு துளி அளவும் ஆர்வம் காட்டப்படவில்லையாம். மறுபக்கம் அஞ்சலி தரப்போ, இதுகுறித்து அலட்டிக் கொண்ட தாகத் தெரியவில்லை.

