குறை கூறிய இயக்குநரிடம் வருத்தப்பட்ட கதாநாயகன்

குறை கூறிய இயக்குநரிடம் வருத்தப்பட்ட கதாநாயகன்

2 mins read
10a9d249-cb3a-48e5-9615-889f96dfd3fb
-
Google News Preferred Icon

தன்னை வைத்து படம் இயக்கிய இளம் இயக்குநரே தம்மைப் புரிந்து கொள்ளவில்லை என ஆதங்கப்பட் டிருக்கிறார் நடிகர் சிம்பு. இது தொடர்பாக வெளியான ஒலித்தொகுப்பு ஒன்று திரை ரசிகர்கள் மத்தியில் பரபரப்பாக உலா வருகிறது. அந்த உரை யாடலில் இயக்குநர் ஆதிக் ரவிச் சந்திரனிடம் வருத்தம் கலந்த தொனியில் சிம்பு பேசுவது பதிவாகி உள்ளது. சிம்பு நடிப்பில் கடைசியாக வெளியான படம் 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்'. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி இருந்தார். இப்படம் வசூல், விமர் சன ரீதியில் தோல்விகண்டது. இதையடுத்து சிம்பு சரியாக ஒத்துழைக்கவில்லை என்றும் நஷ்டத்துக்கு இதுவே காரணம் என்றும் படத்தின் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் குற்றம் சாட்டினார். இயக்குநர் ஆதிக்கும் அவர் கூறியதை வழிமொழிந்தார்.

இதையடுத்து ஊடகங்கள் சிம்புவை கடுமையாக விமர்சித் தன. இந்நிலையில் தன் மீது இயக்குநரும் தயாரிப்பாளரும் பகிரங்கமாக குற்றம்சாட்டிய பிறகு, ஆதிக்கை தொடர்புகொண்டு பேசியுள்ளார் சிம்பு. அப்போது, "உடன் இருந்த நீயே இப்படிச் செய்யலாமா?" என்று சிம்பு கேட்பது பதிவாகி உள்ளது. "என்னுடன் இரண்டு ஆண்டு கள் பயணித்த நீயே என்னைப் பற்றி தெரியாமல் பேசி இருக்கிறாய். இதனால் உனக்கு ஏதேனும் பலன் இருந்ததா? "இதனால் உனக்கு பட வாய்ப்பு கிடைத்திருந்தால்கூட மகிழ்ச்சி அடைந்திருப்பேன்," என்றும் சிம்பு மேலும் கூறியுள்ளதும் அந்த ஒலித் தொகுப்பில் பதிவாகி உள்ளது. இதன் மூலம் இப்படம் தோல்வி அடைய சிம்பு மட்டுமே காரணமல்ல என்று ரசிகர்கள் தங்களுக்கு மத்தியில் பேசத் தொடங்கி உள்ளனர்.

'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படத்தில் சிம்பு.