முதல் முறையாக சூர்யா நடிக்கும் படத்துக்கு இசையமைக்க உள்ளார் 'ஹிப் ஹாப்' ஆதி தமிழா. கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடிக்க உள்ள படத்துக்கு இசையமைப்பாளராக ஆதி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் எனத் தகவல் கசிந்துள்ளது. இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது. கடந்த ஆண்டு வெளியான 'மீசைய முறுக்கு' படத்தில் நாயகனாக நடித்த ஆதி, இனி படங்களுக்கு இசையமைப்பதைக் குறைத்துக் கொள்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 'கலகலப்பு-2' படத்துக்கு இசை அமைத்தவர், மேலும் சில படங்களில் இசையமைப்பாளராகப் பணியாற்ற இப்போது ஒப்புக்கொண்டிருக் கிறாராம். இதற்கிடையே புதிய படம் ஒன்றில் ஹாக்கி வீரராக நடிக்க இருக்கிறார் ஆதி.
சூர்யா படத்தில் ஆதி தமிழா
1 mins read
-

