கார்த்திக்குடன் அண்மையில் நடித்து மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற 'தீரன் அதிகாரம் ஒன்று' படத்தில் நடித்திருந்தார் ரகுல் பிரீத் சிங். அந்தப் படம் வெற்றியடைந்ததைத் தொடர்ந்து விஜய்யின் 62வது படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார். அதன் பிறகு இவர் 'ஸ்பைடர்' படத்தில் நடித்திருந்தார். 'ஸ்பைடர்' படத்திற்கு பிறகு தமிழ், தெலுங்கில் தனக்கு அதிக வாய்ப்புகள் கிடைக்கும் என்று எதிர் பார்த்திருந்தார் ரகுல் பிரீத் சிங். ஆனால் அந்தப் படம் அதிர்ச்சி தோல்வியாக அமைந்ததால் ஏ.ஆர்.முருக தாஸ் இயக்கத்தில் அவர் நடிக்கவிருந்த 'விஜய் 62' பட வாய்ப்பினை இழந்தார்.
இந்நிலையில், ரகுல் பிரீத் சிங் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கும் படங்களில் இரண்டாவது கதாநாயகியாக நடிப்பதாக செய்திகள் வெளியானது. இந்தச் செய்தியைக் கேட்டு அதிர்ச்சி யடைந்த ரகுல் பிரீத் சிங் உடனடியாக அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். "தற்போது நான் நடித்து வரும் படங்களில் முதன்மை நாயகியாகத்தான் நடிக்கிறேன். நான் நடிக்கும் படங்களில் வேறு நாயகிகள் நடித்தாலும் அவர்களைக் காரணம் காட்டி எனக்கான கதாபாத்திரத்தின் காட்சிகளைக் குறைக்கவில்லை. "அப்படி மற்ற நடிகைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்துவிட்டு என்னை இரண்டாவது நாயகியாக்கினால் அந்தப் படங்களில் நான் நடிக்க மாட்டேன். அவர்கள் கொடுத்த முன்பணத்தைக் கொடுத்துவிட்டு வெளியேறிவிடுவேன்," என்று காட்ட மாகத் தெரிவித்துள்ளார் ரகுல் பிரீத் சிங்.

