தடையை மீறி வெளிவந்த 'அகிலாண்டகோடி பிரம்மாண்ட நாயகன்'

தடையை மீறி வெளிவந்த 'அகிலாண்டகோடி பிரம்மாண்ட நாயகன்'

1 mins read
9214e532-704e-4fb5-b01b-dbf938bc1912
-
Google News Preferred Icon

அனுஷ்கா நடித்த பல படங்களுக்குத் தடை விதிக்கப் பட்டு வழக்குத் தொடரப்பட்ட நிலையில் தற்போதும் அவர் நடிப்பில் வெளியாகியுள்ள புதிய படத்திற்கும் வழக்குத் தொடரப் பட்டுள்ளது. அனுஷ்கா, நாகார்ஜுனா நடிப்பில் நேற்று வெளியான 'அகிலாண்டகோடி பிரம்மாண்ட நாயகன்' திரைப்படத்திற்குத் தடை கோரி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்குத் தொடரப் பட்டது. இந்தப் படம் ஆண்டாளை மையப்படுத்தி எடுத்துள்ளதால் விளம்பரத்திற்காக ஒட்டப்பட்ட சுவரொட்டிகளில் வைரமுத்து, ஆண்டாளின் பெருமைகளை உணர்ந்தவர், உயர்த்தியவர் என்ற வாசகங்கள் இடம் பெற்றிருந்தன.

இதுபற்றி பேசிய இதன் தயாரிப்பாளர் துரைமுருகன், "பெருமாள் வரலாறு, அவர் மீது பக்தி கொண்டவரின் பக்தி பற்றி அழகாகச் சொல்கிற படம். இது ஆந்திராவில் பெரிய அளவில் வெற்றி பெற்ற பக்தி மணம் கொண்ட படமாகும். "படத்தையே பார்க்காமல் விளம்பரத்துக்காக வழக்குப் போட்டுள்ளதால் படத்துக்குப் பிரச்சினை எழுந்துள்ளது போன்ற தோற்றம் உருவாகி உள்ளது.