உற்சாகத்தில் காஜல் அகர்வால்

உற்சாகத்தில் காஜல் அகர்வால்

1 mins read
b4c8bf26-cb66-4df1-86b3-a8c04156ff2f
-
Google News Preferred Icon

தமிழில் விஜய், அஜித்துடன் நடித்து விட்டுத் தெலுங்கிற்குச் சென்ற காஜல் அகர்வால், நானி தயாரித்த 'அவே' படத்தில் நடித்திருந்தார். பெண்களை மையப்படுத்தி உருவான இந்தப் படத்தில் காஜலுடன் நித்யா மேனன், ரெஜினா ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்தனர். கடந்த வாரம் வெளியான இந்தப் படம் ஆந்திரா மட்டுமின்றி அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளிலும் வசூலில் சாதனை செய்து வருகிறது.

அந்த வகையில், முதல் வார இறுதியில் அரை மில்லியன் டாலர் வசூல் செய்த 'அவே' படம் விரைவில் ஒரு மில்லியன் டாலர் வசூலித்துச் சாதனை செய்துவிடும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. அதனால் அந்தப் படத்தைத் தயாரித்துள்ள நானி மகிழ்ச்சியில் உள்ளார். அதேபோல் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் காஜல் அகர்வால், 2018ஆம் ஆண்டு நல்லதொரு துவக்கமாக அமைந்திருப்பதால் மகிழ்ச்சியாக இருக்கிறார். படத்திற்கு கிடைத்த வரவேற்பு மகிழ்ச்சியளிப்பதாக டுவிட்டரிலும் தெரிவித்திருக்கிறார்.